கட்டிய மனைவியை கடனில் வாங்கிய பைக்கிறக்கு தவனை கட்ட பணம் கேட்டு நச்சரித்து கொலை செய்த கணவர் நாடகமாடியது அம்பலம் .
காதலியுடன் ஊர் சுத்த மனைவியை பயன்படுத்திய கணவன்! பிறகு அரங்கேறிய கொடூரம்! பதற வைக்கும் சம்பவம்!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்த குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் - தவமணி இருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை, 8மாத பெண் குழந்தை உள்ள நிலையில் மணிகண்டன் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் மனைவிக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த மணிகண்டன் அதே ஊரை சேந்த வேறொரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி அவருடன் ஒன்றாக வெளியூர் சென்றுவர வசதியாக, நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்று பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த பெண்ணுடன் தனது கணவர் ஊர் சுற்றுவதை அறிந்த மனைவி தவமணி, கணவர் மணிகண்டனிடம் இது குறித்து கேட்டதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடனில் வங்கிய பைக்கிற்கு தவணை தொகை செலுத்த பணத்தை வரதட்சனையாக 20 ஆயிரம் ரூபாய் வாங்கி வரச்சொல்லி மனைவி தவமணியை டார்ச்சர் செய்ய, ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றியதால் தவமணியை சுவற்றில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளான் மணிகண்டன் என்கின்றனர் காவல்துறையினர்.
கொலையை மறைக்க திட்டமிட்ட அவன் தவமணியின் சடலத்தை சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்தது அம்பலமானது. மணிகண்டனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து உள்ளனர், ஒருவர் தவறான சவகாசம் குடும்பத்தில் உருக்குழைத்துள்ளது.