மனைவி தலையில் பெரும் கல்லை போட்ட கணவன்! பிறகு குழந்தைகளுடன் செய்த விபரீதம்!

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் பேர்ணாம்பட்டு மசிகம் கிராமத்தில் குடியாத்தம் கஸ்பா பகுதியை சேர்ந்த கார்த்திக், அவருடைய மனைவி ஜெயக்கொடி ஆகியோர் வேலை செய்து வந்தனர்.  கோழிப்பண்ணை அருகே உள்ள குடிசையில் இவர்கள் தங்கியிருந்தனர்.

குடும்ப விவகாரத்தில் கார்த்தி – ஜெயக்கொடி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட வந்துள்ளது. இந்த நிலையில், கணவர் கார்த்திக், மனைவியின் தலையில் நேற்று இரவு கல்லை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

காலையில் வீட்டில் ஜெயக்கொடி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து கோழிப்பண்ணைக்கு வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த பேர்ணாம்பட்டு போலீசார்,  ஜெயக்கொடி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.  இதனிடையே கார்த்தி – ஜெயக்கொடியின் குழந்தைகள் மாயமாகியுள்ளன. அவர்களையும் தன்னுடன் கார்த்தி அழைத்துச் சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நிகழ்ந்ததா என போலுசார் விசாரித்து வருகின்றனர்.