உயிரிழந்த மனைவியால் கணவனுக்கு கிடைத்த ரூ.39 லட்சம்! நெகிழ வைக்கும் சம்பவம்!

டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஒருவரின் மனைவி உயிரிழந்த நிலையில், அவருக்கு ரூ.39 லட்சம் நஷ்ட ஈடாக ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் பிளஸ்ஸி டாம். கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஷார்ஜா யுனிவர்சிட்டி ஹாஸ்பிடலில் நர்ஸாகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், அவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர் தவறான ஊசியை போட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சுய நினைவை இழந்த பிளஸ்ஸி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருக்கு 2 குழந்தைகள் மற்றும் ஒரு கணவர் உள்ளார். 32 வயதான பிளஸ்ஸியின் மரணம் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று என்பதால், இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க, ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

இதன்படி, பிளஸ்ஸியின் கணவர் ஜோசப் ஆபிரகாமுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சார்பாக, ரூ.39 லட்சத்து 4 ஆயிரத்து 709 வழங்கும்படி, ஷார்ஜா சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் வெளிநாடுவாழ் இந்தியர்களிடையே பரவலாக பேசப்படும் விசயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.