வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன்! தூக்கில் சடலமாக தொங்கிய மனைவி! கும்பகோணம் பரபரப்பு!

கும்பகோணத்தில் உள்ள திருமங்கலக்குடி பகுதியில் வசித்து வந்தவர் காபத் நிஷா. இவருக்கும் முகமது காபுஸ் இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. முகமது வெளிநாட்டில் தங்கி வேலை புரிந்து வருகிறார்.


இந்நிலையில் முகமது வேலை பார்க்கும் கம்பெனியில் விடுப்பு எடுத்து விட்டு சில வாரங்கள் மனைவியுடன் இருப்பதற்காக கும்பகோணம் வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முகம்மதின் மனைவி நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அருகிலிருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிஷாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முகமதிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதற்கு இடையில் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை அல்ல. ஆதலால், இந்த தற்கொலையில் நிச்சயம் ஏதோ மர்மம் இருக்கிறது என காவல்துறையினரிடம் நிஷாவின் தாயார் புகார் அளித்துள்ளார்.