நண்பர்களுடன் மனைவியை அனுப்பி வைத்த விபரீத கணவன்! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!

டெல்லியில் குடிபோதையில் கட்டிய மனைவியை நண்பர்களுக்கு கட்டிலில் விருந்தாக்கிய உத்தம புருஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.


டெல்லி கீதா காலனியில் வசிக்கும் அதுல் அகர்வால் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிபோதையில் பாலிய சம்பந்தப்பட்ட விஷயங்களில் எல்லை மீறிச் சென்றதாக அதுல் அகர்வால் மது அவரது மனைவி புகார் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் கணவர் அதுல் அகர்வால் மீது அவரது மனைவி புகார் அளித்தார்.

அதில் அவர் இயற்கைக்கு மாறாக தன்னிடம் கணவர் பாலியல் அத்து மீறுவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் அவருடைய நண்பர்களையும் அழைத்து வந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்தார் எனவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார். எப்போதும் குடித்து விட்டு வரும் கணவர் அவ்வப்போது என்னை இயற்கைக்கு மாறாக பாலுறவில் ஈடுபடுமாறு அடித்து மிரட்டி கட்டாயப்படுத்தினார் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார் அந்த பெண்.  

இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என்றும் அப்படி சொன்னால் தன்னுடன் உடலுறவில் ஈடுபட்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனவும் மிரட்டுவதாக தெரிவித்தார்.

எனவே கணவர் அகர்வால் மீதும் அவர் அனுமதியுடன் தன்னிடம் அத்து மீறிய நண்பர்களான சஞ்சய் கௌசிக் மற்றும் புஷ்பேந்திர மிஸ்ரா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அந்த பெண்ணின் கணவர் அகர்வால் மற்றும் அவரின் நண்பர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.