ஆத்தாடி காமப் பார்வை! மனைவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்த நபர்! தட்டிக் கேட்ட கணவனுக்கு கைவிரல் துண்டான பரிதாபம்! கோயம்பேடு விபரீதம்!

சென்னை: தனது மனைவியை குறுகுறுவென பார்த்த நபரை கண்டித்த கணவருக்கு பரிதாபமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பேபி என்பவர் (40 வயது) தனது மனைவி தேவியுடன்  மதுரவாயல் செல்லும் பேருந்திற்காகக் காத்திருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு இளைஞர், தேவியை வைத்த கண் வாங்காமல் வெறித்தனமாகப் பார்த்துள்ளார்.

இதனால் ஒருகட்டத்தில் பேபி ஆத்திரமடைந்துள்ளார். அந்த நபரின் அருகில் சென்று, ஏன் இப்படி என் மனைவியை பார்க்கிறாய், எனக் கேட்டு பேபி வாக்குவாதம் செய்திருக்கிறார். அதற்கு அந்த நபர் திடீரென பேபியின் கையை பிடித்து விரலை கடித்துவிட்டு தப்பியோடினார்.

ஆனால், அருகில் இருந்தவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு, அந்த நபரை சுற்றி வளைத்து போலீசில் பிடித்துக் கொடுத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர். இதற்கிடையே விரலை பறிகொடுத்த பேபி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.