மனைவி கண் முன் மாமியாரின் மூக்கை கடித்து துப்பிய மருமகன்! பதற வைக்கும் சம்பவம்! அதிர வைக்கும் காரணம்!

லக்னோ: வரதட்சணை கேட்டு மாமியாரை, அவரது மருமகனே கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 இதுதொடர்பாக, போலீசார் கூறியுள்ள தகவலின்படி, உத்தரப் பிரதேச மாநிலம், பரேய்லி பகுதியை சேர்ந்தவர் காந்தா ரஹ்மான். இவரது மகள் சாந்த் பி. இந்திய உணவுக் கழகத்தில் (எஃப்சிஐ) பணிபுரியும் சாந்த் பி, சமீபத்தில் முகமது ஆஸ்ஃபக், என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், முகமது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அடிக்கடி சாந்த் பியை தொல்லை அளித்துள்ளனர். இதன்படி, சாந்த் பி குடும்பத்தினர் அவர்களுக்கு, ரூ.10 லட்சம் வரதட்சணையாக கொடுத்தனர்.  

இந்நிலையில், சில நாள் முன்பாக, சாந்த் பி, முகமது ஆஸ்ஃபக் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, மேலும் 5 லட்சம் ரூபாய் கூடுதல் வரதட்சணை தரும்படி சாந்த் பியை, முகமது குடும்பத்தினர் தொல்லை தர தொடங்கியுள்ளனர். புதியதாக பிறந்த குழந்தையுடன் தாய் வீடு சென்றிருந்த சாந்த் பியை தேடிச் சென்ற முகமது, அவரது தந்தை வம்பிழுத்துள்ளனர்.

ஒருகட்டத்தில் சாந்த் பி மற்றும் அவரது தாயை அடித்து உதைத்த முகமது, தனது மாமியாரை மூக்கை கடித்து காயப்படுத்தியுள்ளார். இதேபோல, முகமதுவின் தந்தை, சம்பந்தி என்றும் பாராமல் சாந்த் பியின் அம்மா காந்தாவின் காதை கத்தியால் அறுத்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கம் பக்கத்தினர் தலையிட்டு, சாந்த் பி குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளனர்.  

பிறகு இதுபற்றி போலீசில் புகார் கூறப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.