UPSC எக்சாமில் தீவிரம்! இல்லற வாழ்க்கையை மறந்த கணவன்! தனிமையில் தவித்த மனைவி எடுத்த பகீர் முடிவு!

போபால்: யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி மையம் நடத்தும் கணவரை விவாகரத்து செய்வதாக, அவரது மனைவி கூறியுள்ளார்.


மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நூரோன்னிஸா கான். இவரது கணவர் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். பிஹெச்டி படித்துள்ள அந்த நபர், யுபிஎஸ்சி தேர்வு எழுதவும் முயன்று தோல்வியடைந்துள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த அவர், இல்லற வாழ்க்கையில் சரிவர நடந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.  இதன்பேரில், அவரது நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த மனைவி நூரோன்னிஸா கான், விவாகரத்து செய்ய கோரி, போபால் மாவட்ட சட்ட சேவை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில் தனது கணவன் தன்னை கண்டுகொள்வதே இல்லை என்றும் உறவு வைத்துக் கொண்டு பல நாட்கள் ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார். இப்படி எப்போது பார்த்தாலும் பரீட்சை பரீட்சை என்று இருக்கும் கணவனுடன் வாழ பிடிக்கவில்லை என்று அந்த மனுவில் நுசூரான்னிஸா கூறியுள்ளார். இல்லறவாழ்வில் ஈடுபாடு இல்லாத கணவனுடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.