விபத்தில் காதல் கணவன் பலி! 8 மாத கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

சாலை விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் அவரது மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் சாலை விபத்தில் கடந்த 18ம் தேதி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த போது அவரது மனைவி இளந்தென்றல் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருவரும் காதலித்து ஆசையுடன் திருமணம் செய்துகொண்ட நிலையில் கணவர் தன்னை விட்டு பிரிந்ததால் இளந்தென்றல் மனம் உடைந்து போனார்.

இனி என்ன செய்வது என்று தெரியாமல் மனம் குமுறிய அந்த கர்ப்பிணிப் பெண் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையிலிருந்து இளந்தென்றல் வெளியே வராததை அடுத்து அவரது மாமனார் ரவி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மருமகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு சென்ற போலீசார் 8 மாத கர்ப்பிணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் இறந்த துக்கத்தில் 8மாத சிசுவுடன் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.