மனைவியின் நாக்கை துண்டாக வெட்டி வீசிய கொடூர கணவன்! அதிர வைக்கும் காரணம்!

விவாகரத்து செய்த மனைவியின் நாக்கை முன்னாள் கணவன் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து, 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிந்தி பாட்டியன் நகரில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு வசிக்கும் ஜஹாங்கீர் என்ற நபர், தனது மனைவி நஸ்ரினை சில நாள் முன்பாக, விவாகரத்து செய்தார். 

இருந்தாலும், மனைவி மீது ஆத்திரம் தீராத ஜஹாங்கீர் பழிவாங்க முடிவு செய்தார். இதன்படி, தனது மைத்துனர் வீட்டில் இருந்த முன்னாள் மனைவியை, தேடிச் சென்ற ஜஹாங்கீர், கையில் வைத்திருந்த கத்தரிக்கோல் உதவியால், அவரது நாக்கை துண்டித்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் அலறிய நஸ்ரினின் சத்தம் கேட்டு, உறவினர்கள் ஓடிவந்து காப்பாற்றினர். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கில் ஜஹாங்கீர் கைது செய்யப்பட்டார். விவாகரத்திற்கு முன்னதாக மனைவிக்கு தலையில் மொட்டை அடித்து சித்ரவதை செய்ததாக ஜஹாங்கீர் மீது புகார் உள்ளது. இதன் காரணமாகவே நஸ்ரீன் விவாகரத்து செய்தார்.

தற்போது முன்னால் கணவனால் நாக்கு அறுக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நஸ்ரீன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.