படுக்கை அறையில் அரை நிர்வாணமாக அண்ணன் மனைவி சடலம்! குழந்தையும் கொடூர கொலை! இளைஞன் வெறிச் செயல்! அதிர வைக்கும் காரணம்!

மும்பையில் தம்பியின் மனைவி மற்றும் அவரது 2 வயது குழந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் யோகேஷ்-ஜெயஸ்ரீ தம்பதி வசித்து வந்தனர். இந் நிலையில் ஜெயஸ்ரீ மற்றும் அவரது 2 வயது குழந்தை 2 தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டனர். ஆடைகள் கலைந்த நிலையில் ஜெயஸ்ரீ உடல் கைப்பற்றப்பட்ட நிலையில் அதன் அருகிலேயே யோகேஷின் அண்ணன் சுரேஷ் அமர்ந்திருந்துள்ளார்.

இதையடுத்து சுரேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல மாதங்களாக வேலை செய்யாமல் குடிப் பழக்கத்திற்கு ஆளான சுரேஷை கடுமையாக பேசி வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர் யோகேஷ்-ஜெயஸ்ரீ தம்பதி. இதையடுத்து வெளியில் சென்ற சுரேஷுக்கு உணவு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது.

இந்நிலையில் யோகேஷ் ஊருக்கு சென்றுள்ள நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற சுரேஷ் தம்பி மனைவி ஜெயஸ்ரீயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு ஜெயஸ்ரீ கூறியதால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தம்பி மனைவியான ஜெயஸ்ரீ அவரது 2 வயது குழந்தையை தலையணையால் அமுக்கி கொன்றுள்ளார்.

மேலும் வேலை இல்லாமல் இருந்ததை குத்திக் காட்டியதோடு மட்டும் அல்லாமல் வீட்டில் அனுமதிக்காமல் இருந்ததால் கொலை செய்ததாக சுரேஷ் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதற்கிடையே ஜெயஸ்ரீ உடல் அரை நிர்வாணத்தில் கண்டெடுக்கப்பட்டதால் ஒருவேளை பலாத்காரம் செய்யப்பட்டாரா என போலீஸ் விசாரித்து வருகின்றனர்.