மனைவியின் அந்த இடத்தில் கடித்து துப்பிய கணவன்! கேட்க கூடாத கேள்வி கேட்டதால் வெறிச் செயல்!

குஜராத் மாநிலத்தில் பர்சில் இருந்த பணம் காணாமல் போனது குறித்து கேட்ட மனைவியின் மூக்கை கடித்து வைத்த கணவனை போலீசார் கைது செய்தனர்.


குஜராத் மாநிலம் கோடாசரை சேர்ந்தவர் 40 வயது ரேஷ்மா குல்வானி. பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் கைலாஷ் குமார் வேலையின்றி வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரேஷ்மா குல்வானி  தனது பர்சில் வைத்திருந்த 3000 ரூபாய் மாயமானது தொடர்பாக கைலாஷ் குமாரிடம் விசாரித்துள்ளார். இது கைலாஷ் குமாரின் தன்மானத்தைச் சீண்ட 

இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கைலாஷ் குமார் தனது மனைவியை தாக்கி அவரின் மூக்கை கடித்துள்ளார். இதனால் வலியில் துடித்த ரேஷ்மா குல்வானியின் அலறலைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ரேஷ்மா குல்வானியின் மூக்கில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் 15 தையல்கள் போட்டனர். ரேஷ்மாவின் புகாரின் பேரில் கைலாஷ் குமாரை கைது செய்த போலீசார், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.