கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சென்ற நபர் அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
நண்பனை பக்கத்தில் வைத்துக் கொண்டே நண்பன் மனைவியுடன்..! ஆண் மென் பொறியாளர் அரங்கேற்றிய விபரீதம்!

பெல்லந்தூருக்கு அருகிலுள்ள கசவனஹள்ளி பகுதியில் ஐ.டி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் நபர் ஒருவர் அதே துறையை சார்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவரின் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்த அந்த பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை கசவனஹள்ளியில் பொழுதுபோக்கு மையத்தில் பிறந்த நாள் ஏற்பாடுகளை செய்தார்.
அந்த நிகழ்ச்சியில் கணவரின் நண்பர்களும் கலந்து கொண்டனர். அங்கு பிறந்த நாள் கொண்டாடிய பின் மற்றொரு நண்பர் வீட்டிற்கு அனைவரும் சென்றனர். பொழுது போக்கு மையத்தில் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றிருந்த அந்த பெண் மிகவும் சோர்வாக இருந்ததால் நண்பர் வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்று ஓய்வு எடுத்துள்ளார்.
அப்போது கணவரும் அவரது நண்பர்களும் மாடியில் பேசிக் கொண்டிருந்தனர். அறை மிகவும் இருட்டாக இருந்துள்ளது. அப்போது அந்த பெண்ணின் ஆடைகள் மெதுவாக களையப்படுவதை அவர் உணர்ந்தார். பின்னர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் அந்த நபர்.
ஆனால் கணவர் இல்லை என்பதை உணர்ந்த அந்த பெண் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தார். சத்தம் போட முயற்சித்தபோது அவருடைய வாயை கையால் மூடிக் கொண்ட அந்த நபர் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். பின்னர் அந்த நபரை கிள்ளிவிட்டு குளியலறைக்கு ஒடிச்சென்று உதவி செய்யுமாறு கத்தினார். பின்னர் மாடியில் இருந்து வந்த நபர்கள் கதவை திறக்க முடியாமல் உடைக்க முயற்சித்தனர். இதையடுத்து நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்றி 24 வயதான ஐ.டி. ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
அந்தப் பெண் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.