பிக்பாஸ் பார்க்க கணவன் தடை! அதிர்ச்சியில் மனைவி எடுத்த விபரீத முடிவு! தவிக்கும் 2 குழந்தைகள்!

புதுச்சேரி மாநிலத்தில் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த போது தம்பதிக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் வங்கியில் பணிபுரியும் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


புதுச்சேரி முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்த நடன சபாபதி - லதா தம்பதியினர் சிந்து நகரில் வசித்து வந்தனர். புதுச்சேரியில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் எழுத்தராக லதா பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 2 தினம் முன்பு இரவு வீட்டில் லதா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டது. அதனால் வீட்டில் இருக்கும் இன்வெட்டர் மூலம் டி.வி. நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தார் லதா. அப்போது அங்கு வந்த கணவர் இன்வெர்ட்டர் மின்சாரத்தை பயன்படுத்தி டி.வி. பார்க்க வேண்டுமா என கோபமாக கேட்டதாக தெரிகிறது.

(பொதுவாக மின்வெட்டு ஏற்பட்டால் எப்போது திரும்ப வரும் என்பது தெரியாது என்பதால் இன்வெட்டர் மின்சாரத்தை சிக்கனமாக பொதுமக்கள் பயன்படுத்தவர். அப்போதுதான் நீண்டநேரம் மின்சாரம் வராவிட்டாலும் அடிப்படை தேவைகளுக்கு அந்த மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்)

இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு முற்ற டி.வி.யை அனைத்து விட்டு சபாபதி தூங்குவதற்காக சென்றுவிட்டார். சாதாரண டிவி பார்ப்பதற்கு கணவர் இப்படி கெடுபிடியாக நடந்து கொள்கிறாரே என வேதனை அடைந்த லதா தற்கொலை செய்து கொள்ளும் முடிவு எடுத்துள்ளார். பின்னர் அவர் அறையில் இருந்த பேனில் சேலையை மாட்டி தூக்குப் போட்டுக் கொண்டார்.

யாரும் பார்க்காததால் சிறிது நேரத்தில் துடி துடித்து இறந்து போனார் லதா. இது குறித்து புதுச்சேரி மாநிலம் முத்தியால் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு டிவிக்காக தன்னை நம்பி உள்ள குழந்தையை நிர்கதியாக விட்டு விட்டு தற்கொலை செய்துகொள்ளும் பெண்களை நினைத்து நொந்துகொள்வதை தவிர வேறு வழியில்லை.

மற்றொரு சம்பவத்தில் பெத்துசெட்டி பேட் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த மகேஷ் என்பவர் அடிக்கடி மனைவி, குழந்தைகளை அடிப்பது வழக்கமாம். நேற்று முன்தினம் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த மகேஷ் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார்.

பின்னர் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மகேஷ். கணவர் திடீரென எடுத்த முட்டாள்தனமான செயலால் அவரது மனைவி வரலட்சுமி தன்னுடைய 2 குழந்தைகளை எப்படி கரை சேர்க்கப் போகிறோமோ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளார்.