மனைவி தெரிவித்த விபரீத ஆசை! ஆத்திரத்தில் வாஷிங்மெசின் பைப்பால் கழுத்தை நெறித்த கணவன்! பிறகு அரங்கேறிய பயங்கரம்! சென்னை திகுதிகு!

சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த பிரசாத் - உஷா தம்பதியினர். இவர்களுக்கு பூஜா என்ற குழந்தை இருக்கிறது. இந்த தம்பதியினர் அப்பகுதி இட்லி, தோசை மாவு வியாபாரம் செய்து வருகின்றனர்.


இந்நிலையில், உஷாவின் அக்கா நளினி, சில நாட்களாக உஷாவை தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது முன்னுக்குப்பின் முரணான பதில்கள் வந்ததால், சந்தேகம் அடைந்துள்ளார். உஷாவின் வீட்டு அருகில் இருப்பவரை தொடர்புகொண்டு உஷாவை பார்க்க சொல்லியுள்ளார். அங்கே சென்று பார்த்தபோது உஷா இறந்து கிடைந்துள்ளார்.

மேலும், பிரசாத் குழந்தையுடன் அவரது பெற்றோர் வீட்டிற்க்கு சென்றது தெரியவந்துள்ளது. பிரசாத் மீண்டும் சென்னை வருவதை அறிந்த உஷா உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவரை வளைத்து பிடித்த போலீசார் விசரிக்கையில், 

"மனைவிக்கும் எனக்கும் இட்லி மாவு விவகாரத்தில் சண்டை வந்தது. பணத்திற்க்காக அவள் ரேஷன் அரிசியை மாவில் கலக்க வற்புறுத்தினாள். எனக்கு அது புடிக்கவில்லை. அதில் மோதல் ஏற்பட்டது. நான் ஆத்திரமடைந்த வாஷிங் மெஷின் ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். தற்போது குழந்தையை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சரணடைய வந்துவிட்டேன்." என வாக்குமூலம் கொடுத்தார்.