இளம் பெண்ணை தொடக்கூடாத இடத்தில் தொட்ட இளைஞன்! உடன் இருந்த கணவனால் அரங்கேறிய தரமான சம்பவம்!

மும்பையில் பெண்ணை அத்துமீறித் தொட்டவனை கூட்டத்தினருடன் சேர்ந்து சரமாரியாக வெளுத்த அந்தப் பெண்ணின் கணவன் அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.


கந்திவிலி ரயில் நிலையத்தில் இருந்து அந்தப் பெண் தனது கணவனுடன் வெளியெறிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்துக்கு நடுவே தனது உடlலில் ஏதோ ஊருவது போல உணர்ந்த அந்தப்பெண் அதிர்ச்சியடை ந்து  திரும்பிய போது எவனோ ஒருவன் தன்னை தொடக்கூடாத இடங்களில் அத்துமீறித் தொட்டுக்கொண்டிருந்ததை அறிந்து கூச்சலிட்டார். 

இதையடுத்து சுதாரித்துத் திரும்பிய அந்தப் பெண்ணின் கணவன் ஆவேசத்துடன் அந்த நபர் மீது பாய்ந்து தாக்கினார். அப்போது அருகில் நடந்து சென்றுகொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் நடந்ததை ஒருவாறாக ஊகித்து அந்த நபரை சரமாரியாகத் தாக்கினர். 

இதனைத் தொடர்ந்து அந்த நபர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். அவனை கைதுச் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ண்டுள்ளனர். அந்த நபர் தாக்கபப்ட்டபோது அங்கிருந்தவரகளால் செல்ஃபோனில் எடுக்கபட்ட வீடியோ காட்சிகள்  இணையதளத்தில் பரவி வருகிறது.