கர்ப்பிணி மனைவிக்கும் கட்டிய கணவனுக்கும் ஒரே அப்பா! டிஎன்ஏ சோதனையில் அம்பலமான பகீர் சம்பவம்!

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தனக்கு தங்கை முறை என தெரிந்து கொண்ட கணவர் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் இங்கிலாந்தில் நிகழ்ந்துள்ளது.


இங்கிலாந்தில் 24 வயது மிக்க இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மற்றவர்களின் கருத்தைக் கேட்பதற்காக பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். 

அதில் நானும் எனது மனைவியும் பள்ளிப் பருவத்திலிருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எனது மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். டிஎன்ஏ டெஸ்ட் மேற்கொள்வதற்காக மருத்துவமனை சென்றோம். அங்கு எங்கள் இருவரின் டிஎன்ஏ ஒன்றாக இருக்கின்றது என தெரியவந்துள்ளது.

அதாவது எனது மனைவி எனக்கு ஒன்றுவிட்ட தங்கை முறை ஆகிறார். எங்கள் இருவருக்கும் ஒரே தந்தை. ஆனால், இரு தாயார். எங்களின் தாயாருக்கு இந்த விஷயம் தெரியவில்லை. உங்களின் கருத்தை கேட்க இதை நான் இங்கு பதிவிடுகிறேன். எங்களை யாரும் பிரிக்க இயலாது.

நான் விடவும் மாட்டேன். ஒருவர் மீது மற்றொருவர் இன்னமும் அன்பு செலுத்தி வருகிறோம். எங்களின் பயம் யாதெனில் குழந்தையை இந்த விஷயம் பாதிக்குமா என்பது தான் என பதிவிட்டு இருந்தார்.

அதற்கு சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில் இருவருடைய அன்பு இருந்தால் போதும் உங்களை யாராலும் பிரிக்க இயலாது என்றார். மற்றொருவர், இந்த விஷயம் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் தாயாருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டு இருந்தார்.