திருமணமான 6 மாதத்தில் 3 மாத கர்ப்பம்! மனைவியுடன் சேர்ந்து கணவன் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சி காரணம்!

புதுச்சேரி அருகே குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவரும் தற்கொலைசெய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடு வீரப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தை சேர்ந்த விஜயலட்சுமிஎன்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் மதகடிப்பட்டு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி வந்தனர். திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  

சில நாட்களுக்கு கணவனுடன் கராறு ஏற்பட்டு கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார் விஜயலட்சுமி. பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார் சிவா. பின்னர் சிவா வேலையில் இருந்தபோது அவருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்

விஜயலட்சுமி இதனால் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வீட்டிற்கு சென்ற மனைவி தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் பயந்து போன சிவா சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்தார். இதனால் தீ வீடு முழுவதும் பரவி அந்த தீயில் சிவா துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்படும்போது பேசி தீர்க்காமல் தற்கொலை ஒன்றே முடிவு எடுக்கும் சோக சம்பவங்கள் எப்போது முடிவுக்கு வருமோ?