நடராஜன் மனைவியுடன் சேர்ந்து காரில் சாராயம் கடத்திய இன்ஸ்பெக்டர்! சோதனை மேற்கொண்ட போலீஸ் அதிர்ச்சி!

கடலூர் மாவட்டம் உண்ணாமலைசெட்டி சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.இந்நிலையில் அந்த வழியே வந்த ஒரு வண்டியை பிடித்து அதை சோதனை செய்தபோது அதில் 148 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் கல்லசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இந்நிலையில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் தப்பியோடிவிட்டார். அதிலிருந்த ஒரு பெண்ணை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அப்பெண் விழுப்புரம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சமுத்திரக்கனி 48 தெரியவந்த நிலையில் இது குறித்து மேலும் அவரிடம் விசாரணை நடத்தியபோது தனக்கு உதவியாக காவல்துறை ஆய்வாளர் சுந்தரேசன் செயல்பட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமுத்திரக்கனியின் கணவர் உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார் இந்நிலையில் அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தனது குடும்ப வறுமை காரணமாக சமுத்திரக்கனி மதுபாட்டில்கள் கடத்தி வந்து அதை விற்பனை செய்து வாழ்க்கை நடத்தியுள்ளார்.

இதையடுத்து புதுவையிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வரும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கும் காவல்துறை ஆய்வாளர் சுந்தரேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் காவல்துறை ஆய்வாளர் சுந்தரேசன் தனக்கு மது பாட்டிலை எடுத்து வந்து தரும்படி சமுத்திரக்கனி இடம் கேட்டுள்ளார் அதற்கு ஒப்புக்கொண்ட சமுத்திரக்கனி மற்றும் ஆய்வாளர் சுந்தரேசன் ஆகிய இருவரும் சேர்ந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த போது வாகன சோதனையில் சிக்கி கொண்டனர்.இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் சமுத்திரக்கனியை கைது செய்தனர். மற்றும் தலைமறைவாக உள்ள காவல்துறை ஆய்வாளர் சுந்தரேசன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.