மனைவியுடன் கணவன் பைக்கில் உல்லாச பயணம்! திடீரென பற்றிய தீ! பிறகு நிகழ்ந்த அதிசயம்!

மனைவியுடன் பைக்கில் உல்லாசமாக கணவன் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்தது.


உத்தரப்பிரதேசம் மாநிலம் இட்டாவாவில் நெடுஞ்சாலையில் கணவன் ஒருவர் தனது மனைவியுடன் உல்லாசமாக சென்று கொண்டிருந்தார். புது மனைவி பின்னால் இருக்கும் ஜோரூரில் மாமியார் வீட்டில் வாங்கிக் கொடுத்த பைக்கில் அவர் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கின் பக்கவாட்டில் தொங்க விடப்பட்டிருந்த பைகளில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ வாகனத்திலும் பரவியது- ஆனால் மனைவியுடன் உல்லாசமாக சென்று கொண்டிருந்த அந்த நபருக்கு இது தெரியவில்லை.

ஆனால் நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்தனர். உடனடியாக காரில் விரட்டிச் சென்ற அவர்கள் இருசக்கர வாகன ஓட்டியை எச்சரித்தனர்.  

இதை அடுத்து இருசக்கர வாகனத்தில் இருந்த பெண் கீழே இறங்கி விட தீ அணைக்கப்பட்டது. ஆபத்பாந்தவனாக போலீசார் மட்டும் வரவில்லை என்றால் அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்திருக்கலாம். எனவே ஒரு அதிஷய நிகழ்வு தான் அவர்களை காப்பாற்றியுள்ளது.