ஓட்டலில் ரூம் போட்டு திகட்ட திகட்ட..! கணவன் மனைவி செயலால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்!

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குழந்தையை கொன்று விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது காவல் துறையினரிடம் பிடிபட்டனர்.


அமெரிக்காவை சேர்ந்த கணவன் மனைவியான அமென்டா மற்றும் ஜேம்ஸ் ஆகியோருக்கு ஓக்கிஸ் என்ற குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இருவரும் அமெரிக்காவில் பிரபல ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து மகிழ்ச்சியாக இருக்க நினைத்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் அன்றைக்கு போதை பொருள் அதிகமாக எடுத்துக் கொண்டு பின் மயங்கும் அளவிற்கு போதை தலைக்கேறி விட்டது. இதையடுத்து போதையில் செய்வதறியாது தனது மகனுக்கும் போதைப்பொருளை கொடுத்துள்ளனர்  இதனால் பச்சிளம் குழந்தை ஓக்கிஸ் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து காவல்துறையிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக ஃப்ரீசர் பாக்ஸ் இல் மகனை வைத்து விட்டு இருவரும் ஹோட்டலில் இருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது அவர்களைப் பார்த்து சந்தேகித்த காவல்துறை அதிகாரிகள் அவரை பின்தொடர போதையில் துப்பாக்கியை காட்டி காவல்துறையினரை மிரட்டியுள்ளார்.

பின் சாதுர்யமாக செயல்பட்ட காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் குழந்தையை கொன்று விட்டு தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்ததை அடுத்து அமெரிக்க நீதிமன்றத்தில் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தையின் தாயான அமெண்டாவிற்கு 99 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மேத்திஸ் வழக்கு நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.