சீமந்தத்திற்கு சென்று சடலமாகினர்! கணவன் மனைவிக்கு அடையாளம் தெரியாத வாகனத்தால் ஏற்பட்ட கொடூரம்!

உறவினரின் சீமந்தத்திற்கு சென்று திரும்பிய கணவன் மனைவிக்கு கொடூர நிகழ்வு ஏற்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சேர்ந்த துலுக்காணம் என்பவர், மனைவி காஞ்சனாவுடன், திருக்கழுக்குன்றத்தில் நடந்த உறவினர் ஒருவரின் சீமந்தம் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பிறகு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

மறைமலைநகர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துலுக்கானம் மனைவியுன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த வாகனம், துலுக்கானத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இதனால் தூக்கி வீசப்பட்ட துலுக்கானம் மற்றும் அவரது மனைவி காஞ்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்ததே இருவரின் மரணத்திற்கு காரணமாகியுள்ளது. 

விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.