இளம் கணவன் - மனைவி எடுத்த விபரீத முடிவு! தவிக்கும் 8 மாத கைக்குழந்தை! பதற வைக்கும் காரணம்!

புதுச்சேரியில் குடும்பத்தகராறில் 8 மாத குழந்தையை தவிக்க விட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.


புதுச்சேரி நெட்டப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ராஜாமணி. சிலிண்டர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த சரவணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்றும் சரவணன் குடித்துவிட்டு வந்ததால் வழக்கம்போல நேற்றும் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் கோபமாக வெளியே சென்றுவிட்டார். மீண்டும் சரவணன் வீட்டுக்கு வந்தபோது மனைவி ராஜாமணி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சரவணனுக்கு தனது எட்டு மாத குழந்தையின் எதிர்காலம் பெரிதாகத் தோன்றவில்லை. உறவினர் ஒருவருக்கு போன் செய்த சரவணன் தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறும் கூறி விட்டு செல்போனை அணைத்து விட்டார்.

இதையடுத்து பதறியடித்து உறவினர்கள் சரவணனின் வீட்டுக்கு வந்தபோது தம்பதிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தனர். குழந்தை மட்டும் அழுதபடி கிடந்தது தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.