தனது மகள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட கிடந்ததையும் மருமகன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிய திகில் பார்த்து பெண்மணி ஒருவர் அலறியுள்ளார்.
கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த மகள்! தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிய மருமகன்! நேரில் பார்த்து அலறிய பெண்மணி!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ளது புதிய கல்பாக்கம். இங்கு பரமேஸ்வரி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகள் வாணிக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான மோகன் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் மனைவி மற்றும் மகளுடன் மோகன் புதிய கல்பாக்கத்தில் உள்ள மாமியார் பரமேஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார். தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றதால் அதைப் பார்க்க பரமேஸ்வரி சென்றுள்ளார். பிரச்சாரம் முடிந்து வீடு திரும்பிய பரமேஸ்வரி வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்த உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அவரது மகள் வாணி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பரமேஸ்வரிக்கு அடுத்த அதிர்ச்சியாக அவரது மருமகன் தூக்கில் தொங்கிய நிலையில் துடித்துக் கொண்டிருக்கிறார். பரமேஸ்வரி போட்ட அலறல் சத்தத்தில் அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் வாணி மற்றும் மோகனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வாணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மோகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவி வாணியை கொலை செய்துவிட்டு மோகன் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.