ஆட்டோவில் கணவனுடன் அமர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய பெண்..! சுற்றி வளைத்து தாக்கிய 2 பேர்..! அதிர வைக்கும் காரணம்!

மலப்புரம்: திருமண ஆதாரம் காட்டும்படி கேட்டு கணவன், மனைவியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருர் பகுதியை சேர்ந்தவர் ஜம்ஷீர், இவரது மனைவி சாஃபியா. இவர்கள், தங்களுக்குச் சொந்தமான ஆட்டோவில் கைக்குழந்தையுடன் சென்றிருக்கிறார்கள். திருநாவயா என்ற பகுதி வந்தபோது, சாலையோரம் ஆட்டோவை நிறுத்திய ஜம்ஷீர், குழந்தை அழவே அதற்கு தாய்ப்பால் தரும்படி மனைவியிடம் கூறியுள்ளார்.

இதன்படி, மனைவி சாஃபியா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது, அவ்வழியே வந்த 2 பேர், ஆட்டோவை வழிமறித்துள்ளனர். ஜம்ஷீரையும், அவரது மனைவியையும் திருமண ஆதாரம் காட்டும்படி கேட்டவர்கள், சிறிது நேரத்தில் அடித்து உதைத்தனர்.

உடனடியாக, அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினர். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையேற்று வழக்குப் பதிந்த போலீசார் சம்பந்தப்பட்ட 2 பேரை தேடிவருகின்றனர்.