மனைவி பிரிந்து சென்றதால் அதிர்ச்சி அடைந்த கணவன் 9 வயது மகளுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகாத உறவில் திளைத்த மனைவி! தவித்த கணவன், மகளுடன் நடுரோட்டில் விஷம் குடித்த பரிதாபம்! பதற வைத்த சம்பவம்!

மதுரை திருமங்கலம், தோப்பூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் சிக்கடாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் கிருபாகரன் (41 வயது). இவரது மனைவி நர்ஸாக பணிபுரிகிறார். இவர்களுக்கு, 9 வயதில் ஜூலியா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில் கிருபாகரனின் மனைவி வேறொரு நபருடன் நெருங்கிப் பழக தொடங்கியிருக்கிறார்.
ஒருகட்டத்தில், கிருபாகரனை விவாகரத்து செய்த அவரது மனைவி, தான் விரும்பிய நபருடன் சேர்ந்து வாழ சென்றுவிட்டாராம். அம்மாவுடன் தானும் செல்ல விரும்புவதாக, மகள் கூறவே வேறு வழியின்றி விரக்தியின் உச்சத்திற்கு சென்ற கிருபாகரன் தற்கொலைக்கு முடிவு செய்தார். தனது மகளையும் இந்த விசயத்தில் தன்னுடன் சாகும்படி வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, மதுரை திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் தந்தையும், மகளும் திங்களன்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், கிருபாகரனின் சட்டையில் இருந்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், மனைவியை பிரிந்து பல்வேறு அவமானங்களை சந்தித்து வருவதால் வேறு வழியின்றி தற்கொலை செய்ய தீர்மானித்துள்ளேன்.
என்னுடனே எனது மகள் ஜூலியும் சாக தீர்மானித்துவிட்டாள். இறப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, என்று கிருபாகரன் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.