ஒரே நாளில் கசந்த இல்லறம்! முதலிரவை முடித்துவிட்டு மனைவியை விரட்டிய கணவன்! அதிர வைக்கும் காரணம்!

திருமணம் செய்துகொண்டு அடுத்த நாளே மனைவியின் நகைகளை வாங்கிக்கொண்டு, வேறொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்த கணவன் மீது திண்டுக்கல் எஸ்.பி-யிடம் புகார் அளித்துள்ளார் மனைவி.


திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணா புரத்தில் வசித்து வரும் அனிதா என்பவருக்கு கடந்த ஆண்டு சிவசங்கர் என்பவருடன் திருமணம் ஆனது.

திருமணத்தில் அனிதாவிற்கு நகை மற்றும் பல சீர்வரிசைகள் அளிக்கப்பட்டது. திருமணம் ஆன அடுத்த நாளே தொழில் துவங்குவதாக கூறி அனிதாவின் நகைகளை வாங்கியுள்ளார் சிவசங்கர். அதன் பின், இருவரும் சேர்ந்து வாழாமல் தனித்தனியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், சிவசங்கர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அனிதாவின் பெற்றோர் சிவசங்கரிடம் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசியபோது, சிவசங்கரின் குடும்பத்தினர் மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

அனிதா போலீசாரிடம் புகார் அளித்ததற்கு எவ்வித பலனும் இல்லை. ஆதலால், நேரடியாக திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் குடும்பத்தினருடன் வந்து நேற்று புகார் அளித்துள்ளார்.