கைகளை வச்சிகிட்டு சும்மா இருந்தா தான? ஹூண்டாய் கார் ஷோரூமில் இளம் பெண்ணுக்கு கிடைத்த வித்தியாச அனுபவம்! அதிர்ச்சி வீடியோ உள்ளே!

இமாச்சலப் பிரதேசத்தில் கார் விற்பனையகத்தில் பெண் ஒருவர் காரை ஓட்டிப் பார்த்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. ஷோரும் கண்ணாடிகள் உடைந்தது மட்டுமின்றி மற்றும் சில புதிய கார்களும் சேதம் அடைந்தன.


இமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் கார் வாங்குவதற்காக ஹூண்டாய் கார் விற்பனையகத்திற்கு சென்றுள்ளார். அந்த ஷோரூமில் இருந்த கார்களின் செயல்பாட்டினை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த ஐ10, ஐ20 மாடல் கார்களைப் சோதனை செய்தார். அதற்கு அடுத்தபடியாக ஹூண்டாய் எலைட் ஐ20 காரைப் பார்வையிட்ட அப்பெண்மணி, காருக்குள் சென்று காரின் இக்னீஷனை ஆன் செய்தார். பின்னர் கியரை மாற்றி இயக்க ஆரம்பித்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக கார் சீறிப்பாய்ந்து ஷோரூமின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் கார் ஷோருமின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு குறைந்தது 50 அடி தூரத்துக்கும் மேலாக இழுத்துச் செல்லப்பட்டு, வெளியே நின்றுக் கொண்டிருந்த மற்ற கார்கள் மீது மோதி சேதப்படுத்திவிட்டு நின்றது.

இந்த சம்பவத்தில் அந்த பெண்மணி அதிர்ச்சியில் உறைந்து போனார். அதிர்ச்சியுற்ற பெண் செய்வதறியாமல் காருக்குள்ளேயே அமர்ந்து விட்டார். விபத்தை ஏற்படுத்திய அந்த பெண் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், ஹூண்டாய் எலைட் ஐ20 காரானது மிகவும் சேதமடைந்து நொருங்கியது. 

பார்ப்போரைப் பதைபதைக்க வைத்த இச்சம்பவம், ஷோரூமில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

பெண்கள் பார்க்கிங் செய்யும் போது விபத்து ஏற்படுவது, காரை சரியாக இயக்காமல் விபத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை விளையாட்டாவகவும், பொழுதுபோக்கிற்காகவும் இளைஞர்கள் இணையத்தில் பதிவிடுகின்றனர்.