9 நாட்களுக்கு முன்னர் ஆட்டோவில் ஏறிய இளம் பெண்..! தற்போது வரை வீடு திரும்பவில்லை..! தவியாய் தவிக்கும் உறவுகள்!

ஹைதராபாத்தில் கடந்த 9 நாட்களாக காணாமல் போன தங்களது மகளை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர்கள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


ஹைதராபாத்தைச் சேர்ந்த ரோஷிதா குத்துரு 37, இவர் அதே பகுதியில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். ரோஷிதா வீட்டில் இருந்து வேலைக்கு வராமல் தனது இரு தோழிகளுடன் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் தங்கி வேலைக்கு வந்துள்ளார். இதையடுத்து கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நிறுவனத்தில் வேலை முடித்து வெளியே வந்த ரோஷிதா மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என தெரிகிறது.

இதையடுத்து அவரது பெற்றோர்கள் மகளை தேடி அலைந்துள்ளனர்.பிறகு நீண்ட நேரம் ஆகியும் மகள் கிடைக்காததால் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் அவர் பணியாற்றிய நிறுவனம் மற்றும் அருகில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் விசாரணை நடத்தியுள்ளனர்.இதையடுத்து விசாரணையின் முடிவில் அங்கிருந்த பொதுமக்கள் இளம்பெண் ஒருவர் கச்சிபவுலிபகுதியிலுள்ள விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் ஆட்டோவில் ஏறி செல்வதை பார்த்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது அப்பெண் நடந்து வருவது மட்டுமே அதில் பதிவாகி இருந்தது. அவர் எந்த ஒரு ஆட்டோவில் ஏறினார் அல்லது உடன் இருந்த நபர்கள் குறித்து எந்த ஒரு விவரமும் சரியாக தெரியவில்லை என காவல்துறையினர் அப்பெண்ணை கண்டுபிடிப்பதில் எந்த ஒரு தடயமும் இல்லாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களாகியும் மகளை காணவில்லை என்ற ஏக்கத்தில் அவரது குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் பெற்றோர்கள் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளனர்.