கண் கலங்கி நின்ற வைகோ! கைகளை பற்றிய ஸ்டாலின்! மதிமுகவின் 1 சீட் 2 சீட்டானதன் பின்னணி!

இரண்டு தொகுதிகள் கூட ஒதுக்கவில்லை என்றால் என் நிலைமை என்று வைகோ கண் கலங்கியது தான் மதிமுகவிற்கு மாநிலங்களவை சீட் கிடைக்க காரணம் என்கிறார்கள்.


மக்கள் நலக் கூட்டணியை முறித்துக் கொண்ட வைகோ கடந்த ஒன்றரை ஆண்டாகவே ஸ்டாலினுக்கு ஜால்ரா தட்டி வருகிறார். ஆனால் ஸ்டாலி னோ எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு கூட்டணி குறித்து மட்டும் எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

கூட்டணி பேச்சு தீவிரமான நிலையில் மதிமுக 4 தொகுதிகள் என்று ஆரம்பித்தது. ஆனால் திமுகவோ ஒரே ஒரு தொகுதி தான் என்று பிடிவாதம் காட்டியது. இதனால் 3 தொகுதிகளுக்குவைகோ இறங்கி வந்தார்.

ஆனால் ஒரு தொகுதிக்கு மேல் எதுவும்கிடையாது என்று திமுக முரண்டு பிடித்தது. இதனால் 2 தொகுதியாவது வேண்டும் என்று வைகோ உருகினார். ஆனால் திமுக தரப்போ ஒரே ஒரு தொகுதி தான்அதுவும் உதய சூரியன் சின்னம் தான் என்றது.

இதனால் வைகோ திமுக கூட்டணியில் நீடிப்பாரா என்கிறநிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் ஸ்டாலினை தொடர்பு கொண்ட வைகோ கட்சி ஆரம்பித்து 30 வருடங்களாகப்போகிறது, ஒரே ஒரு தொகுதி என்று கூறினால் எப்படி என்னை என் கட்சிக்காரர்கள் மதிப்பார்கள்? என்று கலங்கியுள்ளார்.

இதனால் தான் வைகோவை நேரில் வரவழைத்து ஒரு ராஜ்யசபா சீட் என்று கூறி தேற்றி அனுப்பியுள்ளார் ஸ்டாலின். கடந்த காலங்களில் வைகோ ஸ்டாலினுக்கு எதிராக எவ்வளவோ செய்த நிலையிலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் அவருக்கு மாநிலங்களை எம்பி சீட் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.