சிசேரியனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?

சுகப்பிரசவம் அடைந்த பெண்களைவிட, சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தாய் மற்றும் குழந்தையின் நலனை பாதுகாக்க முடியும்.


தையல் போடப்பட்டிருக்கும் இடங்களை மருத்துவர் ஆலோசனையுடன் சாவ்லான் அல்லது டெட்டால் போன்ற கிருமி நாசினி கொண்டு தினமும் துடைக்க வேண்டும்.குளித்ததும், தூங்கப்போகும்போதும் மருத்துவர் கொடுத்திருக்கும் களிம்புகளை தடவிக்கொள்ள வேண்டும்.

வலி இருப்பதாக தெரிந்தால் வெந்நீர் பை மூலம் ஒத்தடம் கொடுப்பது ஓரளவு வலியைக் குறைக்கும்அதிக வலி தென்படும் பட்சத்தில் மட்டும் மருத்துவர் ஆலோசனையுடன் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக இப்போது தானாகவே கரைந்துவிடும் அல்லது விழுந்துவிடும் வகையில்தான் தையல் போடப்படுகிறது. அதனால் இதுகுறித்து மருத்துவரிடம் தெளிவான விளக்கம் கேட்டு, தேவையெனில் தையல் விழுந்தபிறகு மருத்துவரிடம் காட்டிக்கொள்ள வேண்டும்.