ஹார்லிக்ஸ் பூஸ்ட் எல்லாம் எதற்கு? உங்கள் கையால் ஆரோக்யமான சத்துமாவு அறைத்துவைத்து குடிங்க!

உடல் பலன் பெற உடல் சோர்வு நீங்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நரம்பு பலன் பெற சத்துமாவு செய்து குடிங்க.


ரத்த ஓட்டம் சீராகும் , ரத்த அணுக்கள் அதிகரிக்கும் , நரம்புகள் பலம் பெறும், உடல் எடை அதிகரிக்கும் சதை கூடும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், மாதவிடாய்,வயிற்று வலி போன்றவை சரியாகும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது தோல் சுருக்கம் மறையும் உடல் சோர்வு முற்றிலும் நீங்கும்.

கேழ்வரகு – 50கி கம்பு – 50கி  சோளம் – 50கி கோதுமை – 50கி புழுங்கல் அரிசி – 50கி பார்லி – 50கி ஜவ்வரிசி – 50கி பச்சை பயறு – 50கி சோயா பீன்ஸ் – 50கி கருப்பு சுண்டல் – 50கி மக்காச்சோளம் – 50கி வறுத்த வேர்க்கடலை – 100கி பொட்டுக்கடலை – 50கி முந்திரி – 50கி பாதாம் – 50கி ஏலக்காய் – 50 வெள்ளை கொண்டைக்கடலை – 50கி நாட்டு சக்கரை - 500கி

செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள மூல பொருட்களை வாங்கி காயவைத்து நன்கு சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளவும் காற்று புகாத இடத்தில் வைத்து கொள்ளுங்கள். 200ml பாலில் 1 ஸ்பூன் பவுடரை கலந்து குடிக்கவும்,குந்தைகளுக்கு பால் கலந்து ஊட்டலாம் கர்ப்பிணிகள்,குழந்தைகள்,உடல் மெலிந்தோருக்கு மிக்க நல்லது