கர்ப்பம் தரிக்க எத்தனை முறை உறவு கொள்ள வேண்டும்? டாக்டர்கள் சொல்வது என்ன?

ஒருமுறை உடலுறவு கொண்டாலே கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


இது சகஜமானதுதான் என்று கூறும் மருத்துவர்கள் ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலே அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விடுகிறார். முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வரும் தகுதியை பெற்றிருந்தால் அந்த பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராவார். 

பொதுவாக எத்தனை முறை உடல் உறவு கொண்டால் கர்ப்பம் அடைய முடியும் என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் உறவிலேயே கூட ண ஒரு பெண்ணால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறை உடலுறவு கொள்ளும்போதே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையின்போது கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும்.

உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள். பாதுகாப்பற்ற முறையிலான உறவுகளை மேற்கொள்ளும்போது கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம்.  

முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் கர்ப்பம் தரிக்க வேண்டாம் என முடிவு செய்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபட வேண்டும். எனவே கர்ப்பம் தரிப்பது பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.