ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதை எப்படி தவிர்ப்பது?

குழந்தை பருவத்திலேயே ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்தல் தொடங்கிவிடுகிறது. இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் சில வருடங்களிலேயே பக்கவாதம், கண் பார்வை பாதிப்பு, நெஞ்சு வலி, சிறுநீரகப் பிரச்னை போன்றவை ஏற்படலாம்.


25 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே வருடம் ஒரு முறையாவது லிப்பிட் புரோஃபைல் எனப்படும் ரத்த பரிசோதனை மூலம் கொழுப்புப் படிவத்தைக் கண்டறிய வேண்டும்.

 ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதற்கு உணவு சார்ந்த காரணங்கள் 25 சதவிகிதம். பரம்பரை அம்சங்களும் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்க் காரணங்களும், எடை, வாழ்க்கை முறையும் ஏனைய முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

புகைத்தல், மதுபானம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ப எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொண்டு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகரித்துக்கொள்வதன் மூலமும் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமும் கொழுப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.