தமிழகத்தில் ஸ்டாலின் ஜெயித்தது எப்படி? ரஜினி வெளியிட்ட அடடே தகவல்!

சென்னை: மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


சென்னை: மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோதாவரி-காவிரி இணைப்பு பற்றி நிதின் கட்கரி கூறியதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அலை வீசியதால் தோல்வியடைந்துள்ளதாகவும், மோடிக்கு எதிரான அலையுடன் சேர்ந்தவர்கள் அனைவரும் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேள்வி:

303 தொகுதிகளில் பாஜக வென்றது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ரஜினிகாந்த் பதில்: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி.*கோதாவரி - காவிரி இணைப்பு குறித்து நிதின் கட்கரி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.

ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை, எதிர்க்கட்சியின் செயல்பாடு முக்கியமானது - ரஜினி. காங். மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. நாளை மறுநாள் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பேன். இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை. கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு வாழ்த்து - ரஜினி.