வங்கிகளில் சேமிக்கப்படும் வைப்புத் தொகை பாதுகாப்பானதா.? என்ன சொல்கிறது ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனம்!
வங்கிகளில் நீங்கள் வைக்கும் ஃபிக்சட் டெபாசிட் பாதுகாப்பானதா..? ரிசர்வ் வங்கி சொல்வது இதுதான்.

(DICGC) எனப்படும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கடன் உத்திரவாத கழகம் என என்றழைக்கப்படும் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று சமீபத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பானது என்ற கருத்தின் காரணமாக. மூத்த குடிமக்கள் மற்றும் நிரந்தர வருமானத்தை எதிர்பார்க்கும் இந்திய குடிமக்கள் பெரும்பாலும் வங்கிகள் சார்ந்த ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஆனால் அனைத்து முதலீட்டு தொகைக்கும் முழு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பு தெரிவித்துள்ள அறிக்கையால்..
வங்கி சார்ந்த முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 1951-63 வரையிலான காலகட்டத்தில் சுமார் 74 வங்கிகள் திவாலாகி முதலீட்டாளர்களின் முதலீட்டு தொகைக்கு வேட்டு வைத்து மொத்த முதலீடும் திவாலாகிப் போனதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கிகள் சார்ந்த முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில்.
1963ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நாட்டில் உள்ள அனைத்து தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்ற உத்தரவிட்டார்.
அதுமட்டுமின்றி வங்கிகளில் செய்யப்படும் முதலீட்டு தொகைக்கு உத்திரவாதம் அளிக்கும் விதமாக 1978 ஜூலையில். DICGC என்ற ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.
அதன்படி நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு முதல் ஒரு லட்சம் ரூபாய்க்கு காப்பீடு தொகை செலுத்தப்பட்டு வருகிறது. ஒருவேளை வங்கிகள் திவால் நிலைக்கு செல்லும் பட்சத்தில். இந்த ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடுகள் மூலம் அதன் முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிக்கும்படி வழிவகை செய்யப்பட்டு சட்டம் உருவாக்கப்பட்டது.
அதன்படி டி.ஐ.சி.ஜி.சி சட்டம், 1961 இன் பிரிவு 16 (1) ன் கீழ், குறிப்பிட்ட ஒரு வங்கி திவால் நிலைக்கு செல்லும் பட்சத்தில். டி.ஐ.சி.ஜி.சி குழுவானது நிரந்தர வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கு லிக்விடேட்டர் மூலம் அவர்களின் வைப்புத்தொகை 1 லட்சம் வரை உடனடியாக வழங்கப்படும்.இந்த சட்டமானது .இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள், சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வங்கிகள் மட்டுமின்றி. கிராமப்புற வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளையும் இந்த நிறுவனம் உள்ளடக்குகிறது.
ஆனால் 1963 முதல் 2019 வரை இந்தியாவில் எந்தவொரு வங்கியும் திவால் நிலைக்கு சென்றது இல்லை.
துர்திஷ்டவசமாக. 2019 செப்டம்பர் மாதம் மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முதல்முறையாக திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு சுமார் 70 சதவீதம் அளவிற்கு எந்த ஒரு பாதுகாப்பு பத்திரங்களும் இல்லாமல் வழங்கப்பட்ட கடன்கள் மூலமாக இந்த வங்கி திவால் நிலைக்கு வந்துள்ளதாக தேசிய வங்கிகள் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அதன்படி இந்த வங்கியில் முதலீடு செய்யப்பட்டு இருந்த முதலீட்டாளர்களுக்கு சுமார் ஒரு லட்சம் வரையிலான முதலீட்டு தொகைகைகள் மட்டும் இதுவரை திருப்பிக் கொடுக்கப் பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது
இந்நிலையில் வரும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது தற்போதைய முதலீட்டிற்கான காப்பீடு 1 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை உயர்த்துவதற்கான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
அதன்படி வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வங்கிகளின் முதலீடுகளுக்கான பாதுகாப்பு பற்றி அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019-20 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே சுமார் ரூ .95,700 கோடிக்கு மேல் மோசடிகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..