ரஜினிகாந்துக்கு எப்படி தைரியம் வந்தது..? சத்தியமா என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்?

சினிமாவைத் தவிர வேறெதும் தெரியாத கலைஞர்களும், வட மாநில தலைவர்களும் சாத்தான்குளம் சம்பவத்துக்கு கடுமையாக கண்டித்த நேரத்திலும் வெளிவராத ரஜினிகாந்த், நீதிபதி பாரதிதாசன் வாக்குமூலத்தை பார்த்தபிறகுதான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


காவல் துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர் ரஜினிகாந்த். அதனால்தான் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். சாத்தான்குளம் சம்பவத்தில் உண்மை தெரியாமல் பேசக்கூடாது என்றுதான் அமைதியாக இருந்தாராம்.

விசாரணைக்குச் சென்ற நீதிபதிக்கே இப்படியொரு நிலைமை என்று தெரிந்தபிறகே கொந்தளித்து அறிக்கை கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் செம வைரலாகிவிட்டது. லேட்டானாலும் லேட்டஸ்ட் என்று மீண்டும் ரஜினி ரசிகர்கள் தூக்கத்தில் இருந்து விழித்து வைரலாக்கி வருகிறார்கள்.