4 அதிமுக எம்எல்ஏக்களை தட்டித் தூக்கிய செந்தில் பாலாஜி! விரைவில் திமுகவில் இணைய ஏற்பாடு!

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பது போல், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தி.மு.க.வுக்கு ஆதரவாக மாற்றும் பணியை முழுமையாக கவனித்து வருபவர், செந்தில் பாலாஜிதானாம்.


இந்த அசைன்மென்ட்டை அவருக்கு வழங்கியிருப்பது சபரீசன் குரூப் என்கிறார்கள். இந்த ஆட்சியை எத்தனை சீக்கிரம் கவிழ்க்க முடியுமோ, அத்தனை சீக்கிரம் கவிழ்க்க வேண்டும் என்பதில் தி.மு.க. இப்போது மிகவும் உறுதியாக இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்துவிட்டால், அதன்பிறகு மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுவிடும்.

அத்துடன் ரஜினிகாந்த் தேர்தலை சந்திக்கவும் நேரம் ஒதுக்கிக் கொடுத்தது போன்று ஆகிவிடும் என்று கருதுகிறார்கள் தி.மு.க.வினர். அதனால், ஆட்சியைக் கலைக்கவேண்டும் அல்லது கவிழ்த்துவிட்டு தி.மு.க. அமரவேண்டும் என தீவிரமாக இருக்கின்றனர். அந்தப் பணியை பார்த்துக் கொண்டிருக்கும் செந்தில் பாலாஜியின் வலையில் இதுவரை 4 அ.தி.மு.க. எல்.எல்.ஏக்கள் சிக்கியிருக்கிறார்கள்.

இவர்கள் நால்வருக்கும் மீண்டும் எல்.எல்.ஏ. பதவி மற்றும் கையில் ஒரு பெரிய தொகை என பேசப்பட்டுள்ளதாம். ஏற்கெனவே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வசம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஆக, இப்போது 7 எம்.ஏ.க்கள் ரெடி. இன்னமும் 5 பேர் வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆட்களை பிடித்துவருகிறாராம் செந்தில் பாலாஜி.

இன்னமும் நாலைந்து நாட்களில் இந்த விசயங்களை முடித்தால்தான், 10ம் தேதிக்குப் பிறகு கூட இருக்கும் சட்டமன்றக் கூட்டத்தை சமாளிக்க முடியும் என்று வேலைகள் விறுவிறுப்படைந்து வருகின்றன.  இந்த விவகாரத்தைப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான்.

ஆட்சிக் கலைப்பு பயம்தான் அவரை வெளியே விடாமல் வீட்டுக்குள் முடகிவிட்டதாம்.