மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் புத்தாண்டு பலன் எப்படி இருக்கும்..? பிரபல நடிகர் உயிருக்கு ஆபத்து - ஜோதிடரின் துல்லிய கணிப்பு

இந்த சார்வரி வருட தொடக்கமே கொரானா வைரஸ் பிடியில் உள்ளது. இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு பலன்களை கணித்து இருக்கிறார் பிரபல ஜோதிடர் ஆர்.சூரியநாராயணமூர்த்தி. இனி, அவரது பலன்களை படித்துப் பாருங்கள்.


உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் நேரத்தில் சித்திரை மாதம் சூரியன் உச்சம் பெற்றலே உலக நோய்கள் கட்டுக்குள் அடங்கும். இனி கொரானா நோய் தாக்கம் படிப்படியாக குறையும் உலக நாடுகளில் அமெரிக்கா கொரானா பிடியில் விலகி மீண்டும் தனது ஆதிக்கம் செலுத்த தொடங்கும் சீனா கொரானா பாதிப்பு பற்றி சுவடு கூட தெரியாமல் போய்விடும்.

 உலக முஸ்லீம் நாடுகளுக்கு கண்டங்கள் உருவாகும். துபாய் போன்ற நாடுகளுக்கு புது புது பிரச்சனைகள் உருவாக்கும். பாக்கிஸ்தானும் இந்தியாவும் தீவிரவாதிகள் பிரச்சனைகள் எல்லை பிரச்சனைகள் வரக்கூடும் எண்ணெய் வளம் குறையக் கூடும் . கச்சா எண்ணெய் பெட்ரோல் டீசல் விலை கூடும் .

உலகளவில் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் ஜோதிடர்கள் ஓவியர்கள் நகைச்சுவை நடிகர்கள் குணசித்திர நடிகர்கள் மறைவு தவிர்க்க முடியாமல் போகும்.

 இந்திய நாட்டுக்கான பலன் 

தற்போது ஆளும் பா.ஜ.க.வின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரக்கூடும். நிர்வாக திறன் குறையக் கூடும். உலக பொருளாதார ரீதியாக மோசமான நிலையை அடையக்கூடும் பண பிரச்னையும் பஞ்சம் வாட்டி வதைக்கும். இந்திய மக்கள் புதுப் புது பிரச்சனைகள் சந்திக்க கூடும்.

பத்திரிகை ஊடக சுதந்திரம் பங்கம் வரும். எழுத்தாளர்கள் கைதி மரணம் உண்டாகும் போலி சாமியார்கள் முகத்திரை கிழியும் கோவில் ஆகமவிதிப்படி பூஜைகள் நடக்காது. வாணிகம் செய்பவர்களுக்கு அரசு புதிய தொல்லைகள் தரக்கூடும் தங்கம் விலை ஏற்ற இறக்கம் என இருக்கும் குழந்தைகள் பாலியல் வன்மை தலைதூக்கும். கல்வி கொள்கை குளறுபடிகள் வரக்கூடும் நாட்டில் மீண்டும் மொழி பிரச்சனைகள் வரக்கூடும் விவசாயம் அவ்வளவு சிறப்பு இல்லை மழைக்கு பதில் சூறாவளி காற்று புயல் தான் இருக்கும்.

 தமிழ் நாட்டுக்கான பலன்

தமிழகத்தில் கொரானா வைரஸ் இனி குறையக் கூடும். விவசாயம் நன்றாக இருக்கும் மழை குறைவு தான். ஆளும் கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும். வருட கடைசியில் தேர்தல் நேரம் வரை மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கு உண்டு. சென்னை கடலூர் பாண்டிசேரி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் சூறாவளி காற்று புயல் பாதிப்புகள் உண்டாகும். கல்வி குளறுபடி இருக்கும் 

மூத்த பத்திரிகையாளர் ஒருவர், பிரபல நடிகர் ஒருவர், பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவருக்கு மரணம் உண்டாகும். வாணிகம் மந்த நிலை உண்டாகும் தமிழக பிரபல சாமியார் கைது செய்யப்படுவார். குழந்தைகள் மீது வன்கொடுமை தொடரும். தமிழக மக்களுக்கு புது பிரச்சனைகள் தலை சுற்றும். மற்றபடி பெரும் ஆபத்துக்கள் இல்லை. மனதில் நிம்மதி பிறக்கும்.

கணித்தவர்

ஆர்.சூரியநாராயணமூர்த்தி, ஈரோடு 

தொடர்பு எண் : 9443923665 & 9865065849