பக்கிரி விமர்சனம்! தனுஷ் நடித்துள்ள ஆங்கில படம் எப்படி இருக்கு?

தனுஷ் முதல் முறையாக நடித்துள்ள ஆங்கில படமான த எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆப் த பக்கிர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.


தமிழில் இந்த படத்திற்கு பக்கிரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பக்கிரி என்றாலே ஊர் சுற்றுபவன் என்று பொருள். படத்தின் பெயருக்கு ஏற்ப தனுஷ் ஊர் சுற்றுவது தான் கதை.

மும்பையில் உள்ள சேரியில் வசிக்கும் அஜாஸ் என்கிற கதாபாத்திரத்தை சுற்றித்தான் பக்கிரி நகர்கிறது. அஜாசாக தனுஷ் அசத்தியுள்ளார். மும்பையில் சேரிப்பகுதியில் வசித்துக் கொண்டு சின்ன சின்ன மேஜிக்களை செய்து கொண்டு வாழ்க்கையை ஓட்டி வரும் அஜாசுக்கு பிரான்ஸ் செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

நேரடியாக விமானத்தில் செல்லாமல் அவர் எப்படி பிரான்ஸ் செல்கிறார் என்பது தான் பக்கிரி படத்தின் கதை. பிரான்ஸ் செல்லும் வழியில் தனுஷ் பல்வேறு தரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறார். ஆனால் அவர்கள் யாருமே தனுஷை ஆச்சரியப்படுத்தவில்லை.

சிறு சிறு காமெடிகள், ரொமான்ஸ், சின்னஞ்சிறு திருப்பம் என ஒரு ஹைக்கூ கவிதை போல படம் நகர்கிறது. தனுஷ் திரையில் இருக்கும் காட்சிகள் சிறிது கூட போர் அடிக்கவில்லை. இதே போல் ஹீரோயினை தனுஷ் சந்திக்கும் காட்சி நன்றாக இருக்கிறது.

ஆனால் இது போன்ற காட்சிகள் ஏராளமான தமிழ் படங்களில் நாம் ஏற்கனவே பார்த்தது தான். திரைக்கதையில் சிறிது தொய்வு இருந்தாலும் தனுஷின் நடிப்பு படத்தை காப்பாற்றிவிடுகிறது. 

போர் அடிக்கிறது குடும்பத்தோடு எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்றால் நிச்சயமாக பக்கிரி படத்திற்கு சென்று வரலாம்.