2020..! புது வருடம் எப்படி இருக்கும்? இரட்டை கோபுர தாக்குதலை துல்லியமாக கணித்த குருட்டு பாபா கூறும் தகவல்கள்..!

2020ல் வெள்ளை மாளிகைக்கும், ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட நேரம் எனவும், அமெரிக்க அதிபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேட்கும் திறனை இழந்துவிடுவார் என்றும் அதிர்ச்சி கணிப்புகள் வெளியாகி உள்ளது.


1996ல் இறந்து போன வங்கா பாபா என்பர் ஏற்கனே இந்த கணிப்புகளை வெளியிட்டுள்ளார். கண் தெரியாதவராக இருந்தும் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடக்கும் என தெரிவித்தவர். அதுபோலவே தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது.  

வங்க பாபா 5079ம் ஆண்டு வரை இந்த உலகில் என்ன்ன மாற்றம் நிகழும் என்பதை தெரிவித்திருந்தார். 2020ம் ஆண்டு வெள்ளை மாளிகைக்கும், கிரெம்ளினுக்கம், ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட நேரம் என கணித்துள்ள பாபா அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மூளைப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் ரஷ்ய அதிபர் புடினை கொல்வதற்கு முயற்சி நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டு ஐரோப்பை தீவிரவாதிகள் ரசாயண ஆயுதங்களுடன் தாக்குவார்கள் என்றும் பாபா கணித்துள்ளார். அதேபோல் ரஷ்யா உலகின் அதிபதியாக மாறும் என்றும் ஐரோப்பா பயனற்ற நிலமாக மாறும் என 1979ல் தெரிவித்திருந்தார். 

2019ம் ஆண்டு ட்ரம்ப்புக்கு ஆபத்து என குறிப்பிட்டிருந்தார் ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவே அவர் கணிப்பை பெரும்பாலானோர் நம்பவில்லை. 12 வயதாக இருக்கும்போது புயலில் சிக்கி மாயமானா பாபா மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பினார். ஆனால் பார்வை பறிபோனது.