எடப்பாடி பழனிசாமி செம பல்டி அடித்து 10ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டார்!

இதுதான் 10ம் வகுப்பு தேர்வு நடத்த சரியான நேரம் என்று நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இன்று காலையில் செம பல்டி அடித்து 10ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டார்.


ஏற்கெனவே அரசு மீது பெரிய பஞ்சாயத்து ஓடியது. அதாவது 5ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்கள். அதற்கு ஆப்பு வைப்பது போன்று கொரோனா வந்துவிட்டது. ஆக, 5ம் வகுப்பு மட்டுமின்றி 8ம் வகுப்பு, 11ம் வகுப்பு தேர்வையும் ரத்துசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் அத்தனை எதிர்க் கட்சிகளும் ஒற்றை குரலில் பேசினார்கள். ஆனாலும் அரசு கண்டுகொள்ளவே இல்லை. நீதிமன்றம் கேட்ட போதும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே செல்வது குறித்து மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 10ம் வகுப்பு தேர்வு மட்டுமின்றி, 11ம் வகுப்பு தேர்வையும் தள்ளிவைப்பதாக அறிவிப்பு செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இன்று நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக அறிவிப்பு வரலாம் என்று கிடைத்த தகவலை ஒட்டியே இந்த அறிவிப்பு வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. உண்மையில் இது, தி.மு.க. கூட்டணியின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். 

பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் கோரிக்கை வெளியிட்டதும், இந்த ஆல் பாஸ் அறிவிப்பை வெளியிட்டிருந்தால், எடப்பாடி மக்களிடம் நல்ல பெயர் வாங்கியிருக்கலாம், அனைத்து விசயங்களிலும் "தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.