எடப்பாடிக்கு எப்படி வீரம் வந்திச்சு? ஆச்சர்யத்தில் பா.ஜ.க. பிரமுகர்கள்!

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்டா என்ற அளவுக்கு இருந்த எடப்பாடி பழனிசாமி, திடீரென பொங்கி எழுந்திருத்திருப்பதை பா.ஜ.க. பிரமுகர்கள் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.


என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? முதலில் குருமூர்த்தி துக்ளக் பத்திரிகையில் பிச்சைக்காரர்கள் போன்று அ.தி.மு.க.வை கேவலப்படுத்தி இருந்ததற்கு இன்று நமது அம்மாவில் பதில் கொடுத்திருக்கிறார்கள். பதவிக்கு அலைவது நாங்கள் அல்ல, அது பா.ஜ.க.வின் வேலை என்று எழுதியிருக்கிறார்கள். மோடிக்கு வேண்டப்பட்ட குருமூர்த்தியை எதிர்த்து எழுதத் துணிந்தது பெரிய விஷயம்தான்.

அடுத்ததாக, இன்று சேலம் பாலத்தை திறந்துவைத்த எடப்பாடி, எட்டு வழிச்சாலை நிச்சயம் வரும். எல்லோரையும் சமாதானப்படுத்தி கண்டிபாக திறப்போம் என்று பேசியிருக்கிறார். தேர்தல் நேரத்தில் இதுகுறித்து வாய்கூட திறக்காத எடப்பாடி திடீரென இப்படி அறிவித்து இருப்பதை விவசாயிகள் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

மூன்றாவதாக, நான் பிரதமருக்கு ட்வீட் போட்டதில் என்ன தப்பு என்று கேள்வி எழுப்புகிறார் எடப்பாடி. அடேங்கப்பா, இவருக்குள்ள இப்படியொரு வீரமா? ஆட்சி போகப்போகுதுன்னு நினைச்சு தைரியமா வேஷம் போடுறாரா என்று பா.ஜ.க. பிரமுகர்கள் கேட்கிறார்கள்.

ஜெயக்குமார் பதில்  சொல்லுப்பா...