ஈரோட்டில் கொரோனா நுழைந்தது எப்படி..? தாய்லாந்து நாட்டினர்தான் காரணமா

தமிழகத்தில் சென்னை, காஞ்சி மற்றும் ஈரோடு என மூன்று மாவட்டங்களில் கொரோனா ஆபத்து இருப்பதாக கருதி, இங்கெல்லாம் முழு ஊரடங்குக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்தப் பட்டியலில் ஈரோடு எப்படி சேர்ந்தது என்று பார்த்தால், இஸ்லாமியர்கள்தான் பரப்பியதாக செய்தி வெளியாகிறது. இவர்கள் எப்படி கொரோனோ பரப்பினார்கள் என்று விசாரித்தோம். 

உலக அளவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் சமய அறிவு பற்றித் தெரிந்து கொள்ள வெவ்வேறு நாடுகளுக்கு செல்லும் குழுவினருக்கு தப்ளிக் என்று பெயர். இந்த குழுவினர் இந்தியா வரும்போது டெல்லியில் உள்ள மர்கஸ் என்ற தலைமையகத்திற்கு வருவார்கள். அங்கிருந்து பல மாநிலங்களுக்குச் செல்வார்கள்.

அப்படி தமிழகத்தில் தப்ளிக் குழுவினருக்கு சென்னையில் ஒரு மையம் உள்ளது. சென்னை மையம் வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேரும் ஈரோடு வந்துள்ளனர். இவ்வாறு தப்ளிக் குழுவினர் ஒரு மாவட்டத்திற்கு வரும்போது, அரசு காஜி மற்றும் எந்த மசூதிக்கு செல்கிறார்களோ அந்த மசூதியின் இமாம் மற்றும் முத்தவல்லிக்கு, தகவல் கொடுக்க வேண்டும். ஆனால், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள் அதுபோல எந்த தகவலும் அளிக்கவில்லை என்று ஈரோடு மாவட்ட அரசு காஜி முகம்மது கிபாயத்துல்லா கூறியுள்ளார்.

அந்த தப்ளிக் குழுவினர் இங்குள்ள இஸ்லாமியர்களோடு இணைந்து புத்தகங்களைப் படித்து, வழிபாடு செய்வதற்காகவே வந்துள்ளனர். தப்ளிக் குழுவினர் முதலில் ஈரோடு சுல்தான்பேட்டை மசூதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து அடுத்த நாள் கொல்லம்பாளையம் மசூதிக்கு வந்துள்ளனர். அந்த நிலையில்தான், கரோனா தொற்று குறித்த தகவலால் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு பழகிய 120 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏழு பேரால் ஈரோடு இப்போது கொரோனா சிக்கலில் மாட்டியிருக்கிறது. இவர்களால் எத்தனை பேருக்கு நோய் பரவியிருக்கிறது என்பதுதான் புரியாத புதிர்.