காஃபி டே ஓனர் சித்தார்த்தா உயிரிழந்தது எப்படி? வெளியானத பிரேதப்பரிசோதனை அறிக்கை! பரபரப்பு தகவல்!

தற்கொலை செய்து கொண்ட காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.


கடந்த திங்களன்று தனது டிரைவருடன் சென்ற சித்தார்தா மாயமானர். சுமார் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சித்தார்தாவின் உடல்  நேத்ராவதி ஆற்றில் கரை ஒதுங்கியது. தொழில் நஷ்டம், கடன் நெருக்கடி போன்ற காரணங்களால் சித்தார்தா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனைஉறுதிப்படுத்தும் வகையில் அவர் கடிதமும் எழுதி வைத்திருந்தார்.

இருந்தாலும் கூட அவர் மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த நிலையில் சிவக்குமாரின் உடல் கண்டு எடுக்கப்பட்ட புதன்கிழமை அன்று பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. கர்நாடகாவின் வென்லாக் மாவட்ட மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப்பரிசோதனையின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சித்தார்தா எப்படி மரணம் அடைந்தார் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சித்தார்தாவின் நுரையீரல் முழுவதும் நீரால் நிரம்பியுள்ளது. இதன் மூலம் சித்தார்தா நீரில் மூழ்கி தான் உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளதாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்தார்தாவின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவரை யாரும் கட்டாயப்படுத்தியதற்கான தடயங்கள் இல்லை என்றும் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சித்தார்தா உயிரிழந்தது எப்படி என்கிற உண்மை தெரியவந்துள்ளது.