ஐ.வி.எஃப். முறையில் குழந்தை எப்படி உருவாக்கப்படுகிறது?

செயற்கை முறையில் ஆண் உயிரணுவையும் பெண் கருமுட்டையையும் இணையவைத்து கருவாக உருவாக்குவதே ஐ.வி.எஃப். எனப்படும் செயற்கை முறை கருத்தரிப்பு எனப்படுகிறது.


பெண்ணுக்கு மாதவிடாயை கட்டுக்குள் கொண்டுவரவும், கருமுட்டை உருவாகவும், சரியான முறையில் வளர்ச்சி அடையவும், சரியான அளவில் முட்டை முதிர்ந்து வெளியேறவும் ஊசி, மாத்திரை வழங்கப்படுகிறதுமுதிர்ந்த கரு முட்டைகளை சேகரித்து ஆண் உயிரணுவை சுத்தப்படுத்தி ஒன்றாக கலந்து வைக்கப்படும்.

ஆண் உயிரணு கரு முட்டையின் கருக்கூட்டை உடைத்துக்கொண்டு கருவாகிறது. ஒரு நேரத்தில் மூன்று முதல் 10 கருக்கள் வரை உருவாக வாய்ப்பு உண்டு. ஐந்து நாட்கள் வளர்ச்சியைக் கண்காணித்தபிறகு இரண்டு அல்லது மூன்று தகுதியாக கருக்கள் மட்டும் கருப்பைக்குள் வைக்கப்படுகிறது. 15 நாட்களில் இந்தக் கர்ப்பத்தை உறுதிபடுத்திக்கொள்ள முடியும்.

குழந்தை இல்லாத தம்பதியருக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்று இந்த .வி.எஃப். முறையைச் சொல்லலாம்.