அத்திவரதர் தரிசன விவகாரத்தில் பாபுஷா மற்றும் பிரகாஷ் சில்க்ஸ் நிறுவனங்களுக்கு பாஸ் எப்படி போனது..? கிடுகிடு சர்ச்சை!

அத்திவரதர் தரிசிப்பதற்கு வி.ஐ.பி. பாஸ் எப்படி வாங்குவது என்பதுதான் பெரும்பாலான மக்களின் சிந்தனையாக இருக்கிறது.


தெரிந்தவர், நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம், எப்படியாவது வி.ஐ.பி. பாஸ் வாங்கமுடியுமா என்றுதான் கேட்கிறார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பிட் நோட்டீஸ் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அதாவது காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான பாபுஷா மற்றும் பிரகாஷ் சில்க்ஸ் நிறுவனங்களில் புடவை வாங்குபவர்களுக்கு வி.ஐ.பி. பாஸ் கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதுதவிர, உள்ளூர் மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமும் ஏற்பட்டுள்ளது. டோனர் பாஸ், வி.ஐ.பி. பாஸ் விவகாரம் இன்னமும் உச்சத்தை எட்டும் என்று தெரிகிறது. இந்த லட்சணத்தில் வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், குழந்தைகள் அத்திவரதர் தரிசனத்துக்கு வரவேண்டாம் என்று அரசு அறிவிப்பு செய்திருப்பது, கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

பேசாம, எல்லோருக்கும் வி.ஐ.பி. பாஸ் கொடுத்துவிடலாம்.