எப்படி ஜெயித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்..? இஸ்லாமியர்கள் ஓட்டு போட்டார்களா?

ஆம் ஆத்மியின் வெற்றி இன்று இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி ஆட்சியைப் பிடிப்பது அத்தனை சாதராண விஷயம் இல்லை.


இத்தனைக்கும் மிருக பலத்துடன் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது, அவர்களை தோற்கடிப்பதற்கு அதிக வலிமை தேவை. ஆனாலும் எப்படி வென்றார் அரவிந்த் ஜெக்ரிவால்..? ஏனென்றால் அவரிடம் மிகப்பெரிய படை இல்லை, இலவசம் போன்ற அறிவிப்புகள் இல்லை. ஜாதி ஓட்டுக்கள் இல்லை. ஆனாலும் ஆம் ஆத்மியை வெல்ல வைத்திருக்கிறார் கெஜ்ரிவால்.

வானத்தை வில்லாக வளைப்பேன் என்று பொய்யான வாக்குறுதிகள் எதுவும் தரவில்லை. ஆம், நடைமுறைக்கு சாத்தியமுள்ள காரியங்களை மட்டுமே பேசினார் கெஜ்ரிவால். அதேநேரம் தேவையில்லாத விஷயங்களில் தன் சக்தியை செலவழிக்கவில்லை.

ஆம், முத்தலாக், காஷ்மீர், குடியுரிமை திருத்த சட்ட மசோதா போன்றவற்றில், காங்கிரஸ் அளவுக்கு மதவாத அரசியலை எதிர்த்து போர் முழக்கமிடவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் முதலில் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அளவுக்கு பேசியவர் கெஜ்ரிவால். பின்பு காஷ்மீரில் 370 எடுக்கபட்ட போது பெரிய அளவில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியவருமில்லை!

அதே போன்று சிறுபான்மையினரின் பாதுகாவலனாக தன்னை ஆம் ஆத்மி அடையாளப்படுத்தவுமில்லை. ஆனால், சிறுபான்மை ஒட்டுகள் உட்பட இந்துகளின் ஓட்டுகளையும் பெற்றே வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளது ஆம் ஆத்மி. 

மக்கள் அரசியல்வாதிகளின் பேச்சுகளை விடவும் செயல்பாடுகளைக் கொண்டே தீர்ப்பு எழுதுகிறார்கள் என்பதற்கு தில்லியின் தேர்தல் முடிவுகளே சாட்சி.