1 கோடி பேர் இருக்கும் பெங்களூரில் வெறும் 846 கொரோனா கேஸ்! சென்னையில் 35,000 கேஸ்! எடியூரப்பா சாதித்தது எப்படி?

பெங்களூருவின் தோராயமான மக்கள் தொகை 1 கோடி (வெளி மாநிலத்தவர்களையும் சேர்த்து) சென்னையை போலவே கூட்ட நெரிசலுக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் பெங்களூரு பிரபலம்.


K.R. புரம், M.G. Road, Cantonment, Hebbala போன்ற பகுகிகளில் உள்ள சந்தைகளில் கூட்டம் கழுத்தை நெறிக்கும் அளவு இருக்கும்.

ஆனால், பெங்களூருவில் Covid எண்ணிக்கை தெரியுமா? 

Active Cases : 414

Total Cases : 846

(17 Jun 2020 நிலவரப்படி தோராயமாக) கிட்டத்தட்ட சென்னையை போன்ற நகரம். ஆனால், சென்னையிலோ 

Active Cases : 16,067

Total Cases: 35,556

---------------------------------------------------

எப்படி இது சாத்தியமானது?

இத்தனைக்கும் சென்னையை விட பெங்களூருவில் புலம் பெயர் தொழிலாளர்கள் அதிகம். Beauty parlor, கட்டுமானத் தொழில் போன்றவற்றில் அவர்களின் பங்களிப்பு அதிகம்.

காரணங்கள் 2.

1) தப்லிக் ஜமாஅத் சென்று திரும்பியவர்களின் எண்ணிக்கை பெங்களூருவில் குறைவு

2) சிறப்பான நிர்வாகம்.

இரண்டாவதை பற்றி பார்ப்போம் :

---------------------------------------------------------

ஒரு நபருக்கு corona வந்தால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி test எடுப்பதற்கு contact tracing என்று பெயர்.

தேசிய அளவில் இது 20(சராசரி). அதாவது, Covid வந்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களில் 20 பேரை மட்டுமே தேடிப்பிடித்து test எடுக்க முடிகிறது, நாடு முழுக்க.

மஹாராஷ்ட்ராவின் சராசரி 8. தில்லியின் சராசரி 9. ஆனால், கர்நாடகாவிலோ contact tracing சராசரி 93. Covid வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 93 பேரை பிடித்து 24 மணி நேரத்தில் test எடுத்தார்கள்(Jan22 முதல் Apr 30 வரை).

அதாவது, corona பெரிய அளவில் தாக்காத காலத்திலேயே, மிக மிக முன்பே விழித்துக்கொண்டு கடினமான contact tracing பணியை நேரம் காலம் பாராமல் செய்து முடித்தனர். 

முதல் ஊரடங்கிலேயே மிகக் கடுமையான முறையில் கடும் எதிர்ப்புகளிடையே, பெரிய சந்தைகளை, (அரசுக்கு வருவாய் கொட்டிக்கொடுக்கும்) வணிக வளாகங்களை மூடியது அரசு.

நம்மூரிலோ வெகு தாமதமாக தான் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. ஆசியாவின் சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட மாநிலம் என்று இவர்கள் சொல்லும் மாநிலத்தில் தான் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

கட்டமைப்பு எந்த அளவு என்பதை விட அது எவ்வளவு வலிமையாக நுணுக்கமாக செயல்படுத்தப் படுகிறது என்பதில் தான் வெற்றி இருக்கிறது. அந்த வகையில் இது வரை கர்நாடக அரசு வெற்றி பெற்று வந்துள்ளது.

அதிக மக்கள் நெருக்கம் இல்லாத கேரளாவை புகழ்ந்த ஊடகங்களும் நம்மூர் போராளிகளும், பெங்களூரை புகழ மாட்டார்கள். காரணம் நாம் அறிந்ததே.

உண்மையில் 1 கோடி மக்கள் தொகையில் corona வை கட்டுக்குள் வைத்திருக்கும் பெங்களூரு நிர்வாகம் தான் உண்மையில் பாராட்டுக்குரியது.