கொரோனாவின் அதிரடி புரட்சி..! வீட்டுக்கடன் வட்டி மளமள குறைவு

வீட்டு கடன் வட்டியில் அதீர புரட்சி ஏற்படுத்திய கொரோனா வைரஸ்.


கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை மற்றும் அடக்கி ஆளவில்லை. ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் தலைகீழ் மாற்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மக்களின் வாழ்க்கை முறை. இயந்திரத் தனமான வாழ்க்கையிலிருந்து விடுதலை என பல நல்ல விஷயங்களையும் சொல்ல முடியாத பல துன்பங்களையும் ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் அறிவித்துள்ள ரெப்போ வட்டி குறைப்பு காரணமாக வீடு மற்றும் வாகன மற்றும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிரடியாக குறைந்துள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 சதவிகிதத்தில் இருந்து 3.75 சதவிகிதமாக அறிவிக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் காரணமாக வங்கிகளில் வழங்கப்படும் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி 4.5 முதல் 5.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதனால் வங்கி சார்ந்த முதலீடுகளை முழுவதுமாக தவிர்க்க தொடங்கியுள்ளனர் குறுகிய கால முதலீட்டாளர்கள்.

முதலீட்டு வட்டி குறையும் பட்சத்தில் வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதமும் குறைவது தானே முறை. அதன்படி வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதங்கள் கடுமையாக குறைந்துள்ளது. தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி 6.8 முதல் 7.30 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

ஏற்கனவே இந்த வட்டி விகிதம் 8 முதல் 8.75 சதவிகிதம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஊரடங்கு காலம் விலக்கப்பட்ட பிறகு தனிநபர் கடன் மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள இந்த வேளையில். வங்கிகளில் வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைந்துள்ளதால் ஏற்கனவே கடன் வாங்கியுள்ளவர்கள் பேலன்ஸ் டிரான்ஸ்பர் எனப்படும் கடன் மாற்றத்தை வேறு வங்கிகளுக்கு மாற்றும் பட்சத்தில் இந்த புதிய வட்டி விகிதங்களை அனுபவிக்கலாம்.

மேலும் புதிதாக கடன் வாங்க உள்ளவர்களுக்கு இந்த வட்டி விகிதங்கள் சரியான லாபத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.